குறள் 1203 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?
மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்