இன்பத்துப்பால் · கற்பியல் · நினைந்தவர் புலம்பல்

குறள் 1202நினைந்தவர் புலம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விரும்பி இணைந்த காதலரை நினைத்தால், பிரிவின்போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்