குறள் 1205 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.
மூலம் · அச்சுப் பக்கம் 245 · ஸ்கேன் 278 · மூலமும் சான்றும்