இன்பத்துப்பால் · கற்பியல் · நினைந்தவர் புலம்பல்

குறள் 1210நினைந்தவர் புலம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

மூலம் · அச்சுப் பக்கம் 246 · ஸ்கேன் 279 · மூலமும் சான்றும்