இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்

குறள் 1170படர்மெலிந்து இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப்போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

மூலம் · அச்சுப் பக்கம் 238 · ஸ்கேன் 271 · மூலமும் சான்றும்