இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை

குறள் 1151பிரிவு ஆற்றாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டும் என்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.

மூலம் · அச்சுப் பக்கம் 235 · ஸ்கேன் 268 · மூலமும் சான்றும்