இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை

குறள் 1152பிரிவு ஆற்றாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும்போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வந்துதிகிறது!

மூலம் · அச்சுப் பக்கம் 235 · ஸ்கேன் 268 · மூலமும் சான்றும்