இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை

குறள் 1155பிரிவு ஆற்றாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 235 · ஸ்கேன் 268 · மூலமும் சான்றும்