இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்

குறள் 1149அலர் அறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் என்றார்பலர்நாண நீத்தக் கடை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும்போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?

மூலம் · அச்சுப் பக்கம் 234 · ஸ்கேன் 267 · மூலமும் சான்றும்