குறள் 1134 — நாணுத் துறவுரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக் கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 231 · ஸ்கேன் 264 · மூலமும் சான்றும்