இன்பத்துப்பால் · களவியல் · காதற் சிறப்புரைத்தல்

குறள் 1126காதற் சிறப்புரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்நுண்ணியரெம் காத லவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 230 · ஸ்கேன் 263 · மூலமும் சான்றும்