இன்பத்துப்பால் · களவியல் · காதற் சிறப்புரைத்தல்

குறள் 1121காதற் சிறப்புரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 229 · ஸ்கேன் 262 · மூலமும் சான்றும்