குறள் 1124 — காதற் சிறப்புரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 229 · ஸ்கேன் 262 · மூலமும் சான்றும்