குறள் 1123 — காதற் சிறப்புரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற் கில்லை யிடம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக - என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்துவிட்டு நீ போய்விடு!
மூலம் · அச்சுப் பக்கம் 229 · ஸ்கேன் 262 · மூலமும் சான்றும்