இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள் 1112நலம் புனைந்து உரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 227 · ஸ்கேன் 260 · மூலமும் சான்றும்