குறள் 1097 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார்போல நடித்துக் கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்