இன்பத்துப்பால் · களவியல் · தகை அணங்குறுத்தல்

குறள் 1089தகை அணங்குறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

மூலம் · அச்சுப் பக்கம் 222 · ஸ்கேன் 255 · மூலமும் சான்றும்