குறள் 1082 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 221 · ஸ்கேன் 254 · மூலமும் சான்றும்