குறள் 1083 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
மூலம் · அச்சுப் பக்கம் 221 · ஸ்கேன் 254 · மூலமும் சான்றும்