குறள் 1070 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பதை ஒளித்துக்கொண்டு 'இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?
மூலம் · அச்சுப் பக்கம் 216 · ஸ்கேன் 249 · மூலமும் சான்றும்