பொருட்பால் · குடியியல் · இரவு

குறள் 1053இரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 213 · ஸ்கேன் 246 · மூலமும் சான்றும்