பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1020நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயிர் இருப்பது போல் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 206 · ஸ்கேன் 239 · மூலமும் சான்றும்