பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1014நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 205 · ஸ்கேன் 238 · மூலமும் சான்றும்