பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1015நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குறைபதி என்னும் உலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

மூலம் · அச்சுப் பக்கம் 205 · ஸ்கேன் 238 · மூலமும் சான்றும்