குறள் 993 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 201 · ஸ்கேன் 234 · மூலமும் சான்றும்