பொருட்பால் · குடியியல் · பண்புடைமை

குறள் 992பண்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 201 · ஸ்கேன் 234 · மூலமும் சான்றும்