குறள் 998 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமைகாட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 202 · ஸ்கேன் 235 · மூலமும் சான்றும்