பொருட்பால் · குடியியல் · சான்றாண்மை

குறள் 983சான்றாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடைந்துசால் பூன்றிய தூண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 199 · ஸ்கேன் 232 · மூலமும் சான்றும்