அறத்துப்பால் · இல்லறவியல்
7. மக்கட்பேறு
குறள் 61–70
- குறள் 61பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற.
- குறள் 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.
- குறள் 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்.
- குறள் 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
- குறள் 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
- குறள் 66குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
- குறள் 67தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
- குறள் 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
- குறள் 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்.
- குறள் 70மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்னோற்றான் கொல்லெனும் சொல்.