குறள் 64 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட் டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்