அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறு

குறள் 62மக்கட்பேறு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடாத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்