அறத்துப்பால் · இல்லறவியல்

8. அன்புடைமை

குறள் 7180
  1. குறள் 71
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.
  2. குறள் 72
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.
  3. குறள் 73
    அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு.
  4. குறள் 74
    அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.
  5. குறள் 75
    அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.
  6. குறள் 76
    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.
  7. குறள் 77
    என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.
  8. குறள் 78
    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.
  9. குறள் 79
    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு.
  10. குறள் 80
    அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.