குறள் 71 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து; கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 15 · ஸ்கேன் 48 · மூலமும் சான்றும்