அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறு

குறள் 70மக்கட்பேறு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்னோற்றான் கொல்லெனும் சொல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு” என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்