குறள் 72 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 15 · ஸ்கேன் 48 · மூலமும் சான்றும்