அறத்துப்பால் · இல்லறவியல் · அன்புடைமை

குறள் 77அன்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 16 · ஸ்கேன் 49 · மூலமும் சான்றும்