குறள் 78 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
மூலம் · அச்சுப் பக்கம் 16 · ஸ்கேன் 49 · மூலமும் சான்றும்