அறத்துப்பால் · பாயிரவியல்
4. அறன் வலியுறுத்தல்
குறள் 31–40
- குறள் 31சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.
- குறள் 32அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
- குறள் 33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.
- குறள் 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற.
- குறள் 35அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்.
- குறள் 36அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
- குறள் 37அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
- குறள் 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்.
- குறள் 39அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல.
- குறள் 40செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.