அறத்துப்பால் · பாயிரவியல்
3. நீத்தார் பெருமை
குறள் 21–30
- குறள் 21ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.
- குறள் 22துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
- குறள் 23இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு.
- குறள் 24உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
- குறள் 25ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
- குறள் 26செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
- குறள் 27சுவையொளி ஊறோசை நாற்றமென றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.
- குறள் 28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
- குறள் 29குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது.
- குறள் 30அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.