குறள் 22 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 5 · ஸ்கேன் 38 · மூலமும் சான்றும்