அறத்துப்பால் · பாயிரவியல்

2. வான் சிறப்பு

குறள் 1120
  1. குறள் 11
    வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
  2. குறள் 12
    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை.
  3. குறள் 13
    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசி.
  4. குறள் 14
    ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்வாரி வளங்குன்றிக் கால்.
  5. குறள் 15
    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.
  6. குறள் 16
    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.
  7. குறள் 17
    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.
  8. குறள் 18
    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
  9. குறள் 19
    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.
  10. குறள் 20
    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு.