அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு

குறள் 16வான் சிறப்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 4 · ஸ்கேன் 37 · மூலமும் சான்றும்