அறத்துப்பால் · பாயிரவியல்
1. வழிபாடு
குறள் 1–10
- குறள் 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
- குறள் 2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.
- குறள் 3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.
- குறள் 4வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.
- குறள் 5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
- குறள் 6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.
- குறள் 7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
- குறள் 8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.
- குறள் 9கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.
- குறள் 10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.