குறள் 8 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்களேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 2 · ஸ்கேன் 35 · மூலமும் சான்றும்