குறள் 26 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 6 · ஸ்கேன் 39 · மூலமும் சான்றும்