அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை

குறள் 24நீத்தார் பெருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 5 · ஸ்கேன் 38 · மூலமும் சான்றும்