அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்

குறள் 38அறன் வலியுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 8 · ஸ்கேன் 41 · மூலமும் சான்றும்