அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்

குறள் 39அறன் வலியுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

மூலம் · அச்சுப் பக்கம் 8 · ஸ்கேன் 41 · மூலமும் சான்றும்