குறள் 36 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின்கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 8 · ஸ்கேன் 41 · மூலமும் சான்றும்