அறத்துப்பால் · இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
குறள் 41–50
- குறள் 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.
- குறள் 42துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.
- குறள் 43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை.
- குறள் 44பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
- குறள் 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.
- குறள் 46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்.
- குறள் 47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.
- குறள் 48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.
- குறள் 49அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
- குறள் 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.